பாரதி பிறந்தநாள் பாடல்

தந்தையர் நாடெனும் தனிப்புகழ் சேர்த்தவர் பாரதி


"செந்தமிழ் நாடு" என்று
     செப்பிடும் போதே காதில்
வந்துதேன் பாயு மென்னும்
     வாய்மையை யெடுத்துக் கூறி
நந்தமிழ்ப் பெருமை தன்னை
     நாட்டவர் அறியச் செய்தார்
தந்தையர் நாடென் கின்ற
     தனிப்புகழ் தனையும் சேர்த்தார்!

யீடிலாப் புகழும் கொண்ட
     பாரதி இந்த நாட்டின்
ஊடெலாம் கலந்து மக்கள்
     உளத்தெலாம் கவிதைப் பாய்ச்சிப்
பீடெலாம் பெற்று வாழும்
     பேறெலாம் நமக்குத் தந்தார்
ஏடெலாம் வாழ்த்து கின்ற
     ஏற்றத்தின் சிறப்பி னாலே!பாவலர் சூரிய விசயகுமாரி
புதுச்சேரி