பாரதி பிறந்தநாள் பாடல்

சொல்லுடன் கலந்துநின்ற சுப்பிரமணிய பாரதி


காட்டினுள்ளே அடரிருள்போல் சொல்வ ளர்த்த
     கவிஞருள்ளே, நெல்வேலிச் சீமை மண்ணைத்
தேட்டையிட்டுப் படருகின்ற பசும்வ யல்போல்
     தெவிட்டாத அழகுகொஞ்சும் சொல்லே வேய்ந்த
பாட்டையிட்டுத் தமிழ்நெஞ்சில் "பாட்டைப்" போட்டான்
     பாட்டனெங்கள் பாரதி!எச் சொல்லின் உள்ளும்
பாட்டனவன் மீசையில்கை வைத்த வண்ணம்
     பார்த்திருப்பான்! அதனால்தான் பாரை யாண்டான்!
கவியோகி வேதம்
சென்னை