காலஞ்சென்ற கணித்தமிழ் ஆர்வலர் திரு உமர் அவர்கள் நினைவாக

o::::o

          ஒருங்குறி என்னும் பன்மொழி உருகுறிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அயராது பாடுபட்ட காலஞ்சென்ற கணித்தமிழ் ஆர்வலரான திரு உமர் அவர்களின் நினைவைப் போற்றி அவர்தம் திறவூற்று மென்பொருட்களையும், ஒருங்குறி எழுத்துருக்களையும், எந்த தளத்திலும் பயன்படுத்தக் கூடிய தானியங்கு எழுத்துருக்களையும், ஒன்று திரட்டி வைக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் இவ்விணைய பக்கத்தை அவர் உருவாக்கிய தேனீயூனி எழுத்துரு கொண்டே உருவாக்கி இருக்கிறேன். அன்றைய காலகட்டதில் ஒருங்குறிக்கென கையளவே எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றில் உமர் அவர்களின் தேனீயூனி, தேனீயூனிடெக்ஸ் முதலான எழுத்துருக்களே முதன்மையானவை. அவருடைய "செய்தியோடை உருவாக்கி", "ஒருங்குறி எழுதி" முதலான படைப்புகள் தமிழ்க்கணினி ஆர்வலர்க்கு மிகவும் பயனுள்ளவை. தற்போது என்னிடம் இருப்பவை கீழிருப்பவைதாம். அவற்றால், நான் மிகவும் பயனடைந்தேன் என்று சொன்னால் அது மிகையன்று.

திரு உமர்தம்பி
காலஞ்சென்ற திரு உமர்தம்பி

          உமர் அவர்களின் பிற திறவூற்று மென்பொருட்களையும் ஸ்கிரிப்டுகளையும் தமிழார்வலர்கள் எனக்கு அனுப்பி வைத்தால் அவற்றை இப்பக்கத்தில் வலையேற்றுகிறேன். எனது மின்மடல் "tyagu@ pudhucherry.com". நிச்சயம் இவரைப்போன்று தொண்டு மனப்பான்மை உள்ளவர்கள், தங்களுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய தங்களின் படைப்புகளை தொகுத்து வைத்திருக்கவே மாட்டார்கள்.

இவண் அன்பன்
இராஜ. தியாகராஜன்


அச்செடுக்க

o::::o