50ம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்

நேரிசை வெண்பா


என்விழா என்றிங்கே பொன்விழாக் கொண்டாடும்
மண்பிறந்த யாவர்க்கு(ம்) என்னன்றி - முன்னாளில்
மூவேந்த ராட்சியில் முன்னிலவாய்ப் பொன்புதுவை
தாவேதும் கண்டதுண்டோ தான்.

வங்கக் கரையோரம் தங்கத் தமிழரால்
மங்கா வொளிவீசும் மாப்புதுவை - பொங்கும்
பொருள்வளமும் தங்கும் தமிழ்நலமு(ம்) ஆய
அருள்நலமும் பெற்றதிவ் வூர்.கவிஞர் யுகபாரதி,
புதுச்சேரி - 605008