பாரதி பிறந்தநாள் பாடல்

பாரதிச் சீரையெண்ணி சிந்தை மகிழ்வோம்.


கல்லார் இல்லா உலகங் காண
இல்லார் இல்லா மக்கள் காண
எல்லா இனமுஞ் சமமென எண்ணப்
பொல்லா மூடப் பொய்மைகள் மாயச்
சொல்லார் பாரதி தோன்றினன் மாதோ!
வீதிகள் தோறும் பள்ளிகள் செய்திட
சாதி பேதச் சழக்குகள் சாய்க்கக்
கொஞ்சுங் குழந்தை கூடியே ஆடிட
செஞ்சொல் குழைத்துச் செப்பினான் பாரதி!
அடிமையில் உழன்றே அல்ல லுற்றநாம்
விடுதலை காண விழைந்தான் பாரதி!
உலகில் தமிழே உயர்ந்தது கண்டான்;
இலகு செம்மொழி ஏற்றம் இந்நாள்
பாரே போற்றும் பாரதிச்
சீரை யெண்ணிச் சிந்தை மகிழ்வமே!கவிஞர் மு. தியாகராசன்,
புதுச்சேரி