50ம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்

நேரிசை வெண்பா


இன்று விடுதலையாய் இன்பமுடன் வாழ்கின்றோம்
அன்று உழைத்திட்ட நல்லோரை நன்றியுடன்
கண்ணீரால் பூசிப்போம் காக்குந் திறங்கொள்வோம்
செந்நீரும் சிந்திடுவோம் சேர்த்து.

புதுச்சேரி என்றால் உலகோர் நினைவில்
மதுச்சேரி ஞாபகமே மிஞ்சும் - பொதுச்சேரி
இஃதென்றால் பொய்மையே இல்லை யுலகீரே
எஃகுபோல் போர்க்களமண் இஃது.கவிஞர் சுந்தரமுருகன்,
புதுச்சேரி - 605004