பாரதி பிறந்தநாள் பாடல்

பாரைப் புதுக்கிய பாரதி


பாட்டினில் புரட்சி செய்தான் பாவையர் உரிமை சொன்னான்
கேட்டினை அடையா வாழ்க்கை கேள்வியிற் சிறந்தா லென்றான்
கூட்டினை திறந்து விட்டுக் குறைவிலாக் களிப்பி லின்பக்
காட்டினில் சுற்றி வந்தான் கடவுள துவென்று சொன்னான்.

சாத்திரம் பொய்க ளென்றான் சடங்கின்றி வாழச் சொன்னான்
ஆத்திரங் கொள்க வென்றான் அவனியை வெல்க என்றான்.
கோத்திரங் குலங்க ளெல்லாம் குறுகிய வழிக ளென்றான்
பாத்திறம் காட்டிப் பாரை பாரதி புதுக்கிட் டானே!பாவலர் சிவ. இளங்கோ
புதுச்சேரி