பாரதி பிறந்தநாள் பாடல்

பாரதி போல் வித்தாகி வாழ விரும்பு


ஊருக்கு நல்லது சொல்லி உழைத்தநம்
பாரதியைத் தேருக்குள் ஏற்றியே - பாருக்குள்
தாரணி சூட்டியே தாய்த்தமிழைப் போற்றியே
சாரதியே நீயென்று சாற்று.

எத்தனை நாள்வாழ்வோம் இம்மண்ணில் என்றெண்ணி
முத்தான நற்செயல்கள் செய்யாமல் - இத்தரையில்
சத்தாக சாப்பிட்டுப் பயனென்ன, பாரதிபோல்
வித்தாகி வாழ விரும்பு.தமிழ்மாமணி புலவர் சீனு. இராமச்சந்திரன்
புதுச்சேரி-9