50ம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்


நேரிசை வெண்பா


பன்னாட்டார் இங்கிருந்து பார்புகழ வாழ்ந்தாலும்
இந்நாட்டுப் பண்பாட்டில் எள்ளளவுங் - குன்றாமல்
தன்மானங் காத்துத் தமிழ்வளர்க்கு(ம்) எம்புதுவை
முன்னணியில் நிற்கும் முனைந்து

நாட்டின் விடுதலையை நாள்தோறும் காத்திடவே
வீட்டிலுள்ள ஆடவர்கள் வேலையை - விட்டுவிட்டுக்
காட்டுத்தீ போலக் களம்நோக்கிக் குவிந்திடுவார்
கேட்கும் முரசொலியைக் கேட்டு.தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன்,
புதுச்சேரி - 605009