50ம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்


நேரிசை வெண்பா


தடுக்கிவிழுந் தாலும் தமிழ்ப்புலவர் மேல்தா(ம்)
அடுக்கியபா மூன்றையு மாக்கிக் - கொடுத்துயர்ந்த
பாரதியுந் தாசனும் பாட்டுப் பரம்பரையுஞ்
சேரநிற்ற லெம்புதுவைச் சீர்.

மறவர் வளருமிடம்; வானம் வழங்கத்
துறவோர் வணங்குமிடம்; தொன்னூற் - றிறலோர்
இலக்கணத்தி லேனை யிலக்கியத்தி லாழ்ந்து
வலம்வந்த தெம்புது வை.புலவர் புதுவைச்செல்வம்,
புதுச்சேரி - 605004