பாரதி பிறந்தநாள் பாடல்

சொடுக்கி விட்ட சாரதி


தொடுத்தெ டுத்த சொல்லிலே
..........சூடு போட்ட நாயகன்
கொடுக்க என்றே தோன்றினான்
..........கோயில் நெஞ்சில் ஊன்றினான்
முடுக்கி விட்ட வார்த்தைகள்
..........மூச்சு விட்டு வாழவே
சொடுக்கி விட்ட சாரதி
..........சுப்ர மண்ய பாரதிகலைமாமணி இலந்தை இராமசாமி
கனடா