புதுச்சேரி - மின்னிதழ்ப் பாவரங்கப் பாடல்

நாடெங்கும் நல்வாழ்வு


அமிழ்தி னுமினி யதுநம் தாய்மொழி
அதனை மக்கள்ம றந்தனரே!
தமிழி லக்கிய மின்னிதழ் நாட்டினிற்
தாயாக வந்துத ழுவுகவே!

செந்தமிழ் மக்கள்சி றப்புடன் வாழ்ந்திட
செந்தார்தி ருக்குறள் வள்ளுவ னார்!
சிந்தனை செதன்று வாழ்ந்திருந் தால்வாழ்க்கைச்
சிகரத் தில்நாமும் சென்றிருப் போம்!

மூடப்ப ழக்கவ ழக்கத்தில் வீழ்ந்துமே
முப்பால ளித்தக்கு றள்மறந் தோம்!
கேடல்ல வோநம்மைச் சூழ்ந்தது மீளாமற்
கிடந்தோம் "ஆகம" சேற்றி னிலே!

பிழைக்க வழியின் றிமக்கள் பலகோடி
பிச்சையெ டுப்பதைப் பார்த்திருந் தும்
உழைத்துப் பெறுகின்ற ஊதியத் தைக்கோயில்
உண்டியில் பேட்டுவ ணங்குகின் றோம்!

எல்லாம வன்செய லென்றிருந் தால்பிச்சை
எடுக்க வைப்பானோ ஓரிறை வன்!
நல்லன செய்யும ரசைய மைத்துமே
நாடெங்கும் நல்வாழ்வு வாழ்ந்திடு வோம்!பைந்தமிழ்ப் பாவலர் கோ. புகழேந்தி
புதுச்சேரி