50ம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்


நேரிசை வெண்பா


கற்றவர் போற்றுங் கவின்மிகுந்த யெம்புதுவை
ஒற்றுமைக் கேயோ ருதாரணமாய் - நற்றமிழ்ப்
பண்பை வளர்த்துப் பரிவுடனே யாவரையும்
நண்பரா யேற்குந் நகர்.

சீர்படும் நீண்ட தெருக்கள்; மணிகாட்டி,
ஊர்நடுவே நிற்கு முயர்க்கூண்டு; நேர்படுங்
கண்ணாடி மாளிகை; கைப்பறியாத் தண்ணீரே
உண்ணீர் புதுவைக்கென் றோது.திருமதி வே. பூங்குழலி பெருமாள்,
புதுச்சேரி - 605001