பாவேந்தர் நினைவாக

செகு நெருப்பு


செகுநெருப் பெனும்வினை சுருட்டாகிச்
.....சிறுவரை மனங்கவர்ந் திடுகாலா!
புகையிலை எனுங்கொடி உருவாகி
.....பொதுஇடம் விடமிட வருவாயே!
சகமதில் பணமதைக் கரியாக்கிச்
.....சகலரும் சனியெனும் குலநாசா!
சுகமதைத் தினம்பெற விழைவோர்க்குத்
.....துயரெனும் தரிசனம் தருவாயே !
செகுநெருப்பு= கொல்லும் தீபாவலர் பேரா. பசுபதி
கனடா