பாரதி பிறந்தநாள் பாடல்

சிந்து வேந்தர் பாரதி


கந்தன் மொழியை வேலன் பேரில்
     காக்க வந்த சொல்லயில்;
இந்தி யக்க விஞர் வானில்
     என்றுங் கூவும் பூங்குயில்
சிந்து வேந்தர் பார திக்கென்
     சென்னி யென்றுந் தாழுமே!
செந்த மிழ்க்க விக்கு முன்பென்
     சென்னி யென்றுந் தாழுமே!பாவலர் எஸ். பசுபதி,
கனடா