புதுச்சேரி - தனிப் பாடல்

ஒப்பற்ற இணையத்தை வாழ்த்துவமே(எண்சீர்)


முன்னாளில் விஞ்ஞான முதிர்ச்சி கண்ட,
     மூப்பர்களாம் அமெரிக்கா சீனா சப்பான்
மின்னஞ்சல் தொலைக்காட்சிக் கணினி எந்திர,
     மேவும்கைப் பேசிபடக் கருவி ஏஞ்சல்
சொன்னாலே மெய்சிலிர்க்கும் அணுவி னூர்தி
     தொலையேவு கணைக்குண்டு உலகை மாய்க்கும்
இன்னாளில் இணையத்தா லெதையுந் துய்க்கும்
     ஏந்துகளைக் கண்டுமனம் மகிழ்கின் றோமே!

தூங்குகின்ற தமிழிளைஞர் துடித்தெ ழுந்தே,
     தொலைத்தொடர்பில் வானியலில் புதுமை செய்தால்!
தேங்கிநிற்கும் தமிழ்நிலத்தின் விதியே மாறும்!
     தேரிச்சிபெற்றே அறிவியலில் தெளிவைக் கண்டோம்!
எங்குகின்றார் எமதிளைஞர் எதையும் வெல்ல,
     ஏற்றமிகு கலாம்சொன்ன நெறியில் சென்றால்!
ஒங்குதமிழ் இணையவிஞ் ஞானி தோன்ற
     ஒப்பற்ற இணையத்தை வாழ்த்து வேனே!பாவலர் இளங்கோ பாண்டியன்
புதுச்சேரி