பாவேந்தர் நினைவாக

தீ விஷம்


நஞ்சினை ஒத்தது நண்பா புகைச்சுருட்டு,
பஞ்சுநுரை யீரலைப் பாழாக்கும் - கெஞ்சியுனைக்
கேட்கின்றேன், மற்றவர்க்கும் கேடுதரும் பீடிதொட
மாட்டே னெனச்சொல் மறுத்து!

நாவின், "சுவைக்கும் நரம்புகள்" பாழாகும்
காவிப் படிந்துக் கறையா கிடும்பற்கள்
சாவினைச் சீக்கிரந் தந்திடும், வெண்சுருட்டுத்
தீவிஷத்தை விட்டுத் திருந்து!பனசை நடராசன்
சிங்கப்பூர்