பாரதி பிறந்தநாள் பாடல்

சூழ்பகை துரத்திய பாரதி


பாட்டுப் பாடிப் பாரதம் காத்த
நாட்டுக் கவிஞர் நலமிகு பாரதி
அடிமை வாழ்வை அறவே வெறுத்துக்
குடிமை உயரவே குவலயம் காத்தார்.
நாட்டு நடப்பை நரம்பு புடைக்க
ஏட்டில் எழுதி ஏற்றஞ் செய்தவர்.
புவியில் சிற்ந்து புதுமை செய்தே
கவியால் உயர்ந்து கடமை புரிந்தவர்.
தாழ்ந்த மக்கள் வாழ்வில் உயர
சூழ்ந்த பகையை துரத்தினார் இவரே!கவிஞர் வ. பழனி,
புதுச்சேரி