இலக்கியச் செய்திகள் - நவம்பர்-2004
புதுவை மற்றும் இணையத்தில்
 
   
எண் இலக்கிய நிகழ்ச்சிகள்
1. நல்லாசிரியர் விருது பெற்ற நற்றமிழ் ஆசிரியர்கள்.

புதுவை மாநில அரசின் 2004ஆம் ஆண்டிற்கான தேசிய,
மாநில, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் வருமாறு:
தேசிய நல்லாசிரியர் விருது:
1. புலவர் வீ. அருணகிரி, விரிவுரையாளர், முதலியார்பேட்டை
2. திரு பன்னீர்செல்வம், ஆசிரியர் குறிஞ்சி நகர்.
மாநில நல்லாசிரியர் விருது:
1. திரு நாகராசன், தலைமையாசிரியர்.
2. திரு இராசு. இராதாகிருட்டினன், தலைமையாசிரியர்
3. திரு சொக்கலிங்கம், மொழியாசிரியர்
4. திரு கோவிந்தராசலு, விரிவுரையாளர்
5. திருமதி. தேவகி ஆனந்தன், தலைமையாசிரியர்

நன்றி - நற்றமிழ் இலக்கிய இதழ்
2. கவியரங்கத் துவக்க விழா - நாள் 18.10.2004.
"கவிதை வானில்" என்னும் கவியரங்க விழா
40 அடி வெங்கட்ட நகர் சாலையிலமைந்த
தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில்
அறிவுசால் திரு மன்னர்மன்னன் தலைமையேற்க,
புரவலர் திரு வேல்சொக்கநாதன் அனுப்பி வைத்த
வாழ்த்துரையுடன்
திருமதி கலாவிசு அவர்களின் நோக்கவுரையுடன்
கலைமாமணி நாகி, தமிழ்மாமணி சீனு இராமச்சந்திரன்
திருமதி வாசுகி இராஜாராம், திருமதி இரேணுகாம்மாள்
திரு இராமகிருட்டின பாரதி இவர்களின் வாழ்த்துரையுடன்
புலவரேறு திரு அரிமதி தென்னகனார்
கவியரங்கு தலைமை தாங்க
இன்னும் பல பல்சுவைக் கவிஞர்களின் தமிழ்த் தேரோட
இனிதே நடந்தேறியது.
கவிதை வானிற் சிறகடித்தனர் புதுவைத் தமிழ்மக்கள்!
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை
கவிதாயினி திருமதி கலாவிசு அவர்களின்
இல்லத்தில் "கவிதை வானில்" கவியரங்கம்
நடைபெறுமென்று அறிவிக்கப் பட்டது
முகவரி:
எண்: 6 வேலாயுதம் பிள்ளைத் தெரு
(இரேணுகா திரையரங்கருகில்)
முத்தியால் பேட்டை, புதுச்சேரி - 3
தொலைபேசி: 2222423
கைப்பேசி: 9894237659
கவிதை வானில் கவியரங்கப் பாடல்கள்
3. நன்னன் அண்ணல் நினைவுப் பரிசுப் போட்டி
2004ஆம் ஆண்டுக்கான நன்னன் அண்ணல் புதினப்
பரிசுப் போட்டி நடைபெறவுள்ளது.
முதற் பரிசு: ரூ. 30000/-
இரண்டாம் பரிசு: ரூ. 15000/-
மூன்றாம் பரிசு: ரூ. 5000/-
விளக்கம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஏகம் பதிப்பகம்
எண்: 3 பிள்ளையார் கோயில், 2ம் சந்து, முதல்மாடி
திருவல்லிக்கேணி, சென்னை- 600005
4. மரத்தடி - திண்ணை இணைந்து நடத்தும் அறிவியற்
புனைக்கதைப் போட்டி -2004
மரத்தடி - திண்ணை - இணைய இலக்கிய இதழ்கள்
இணைந்து அறிவியற் புனைக்கதைப் போட்டி நடத்த
இருக்கின்றன. படைப்பினையனுப்ப கடைசிநாள்
15.1.2004
முதற் பரிசு: ரூ. 10000/-
விளக்கம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
http://www.maraththadi.com
http://www.thinnai.com
5. பாடல் படைத்திடுக - வஞ்சித்துறை-17
நற்றமிழ் இதழின் மரபுப்பா பயிற்சி

காட்டு
அணிகொண்ட பெண்கள்
துணையாரு மின்றி
மனைநீங்க அஞ்சும்
மனம்நீங்க லென்றோ?

1. ஓரடியில் இரண்டு சீர்கள் இருத்தல் வேண்டும்
2. ஓரடியின் சீரமைப்பு முறையே:
புளிமாங்காய் + தேமா என்றிருக்கவேண்டும்
3. இவ்வாறமைந்த நான்கடிகள் ஓரெதுகை
பெற்றிருக்க வேண்டும்

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.11.2004
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர், "நற்றமிழ்",
எண்: 43 அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு
புதுச்சேரி - 605005.

-புலவர் அரங்க. நடராசன்

6. புதுவை விடுதலை பொன்விழா ஆண்டு
50 கவிஞர்கள் பங்கேற்கும் வெண்பாக் கவியரங்கம்

புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை, விடுதலை
பொன்விழாவையொட்டி புதுவை காந்தி திடலில்
கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது - இதில்
19.10.2004 செவ்வாய் மாலை 6.30 மணியளவில்
புதுவைத் தமிழ்ச் சங்கம் 50 கவிஞர்கள் பங்கேற்கும்
சிறப்புமிக்க "வெண்பாக் கவியரங்கம்" என்ற புதுவை
நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது!
தமிழ் நன்மக்கள் அனைவரும் வந்தனர்!
தமிழ் நற்சுவையனைத்தும் பெற்றனர்! வெண்பாக்களை
வெண்பாக்களை 51 கவிஞர்கள் பெயர்கள்:
இதோ

7. கவிதைப் பூங்கா - நண்பர்கள் தோட்டம்
20 ஆவது முழுநிலவுப் பாவரங்கம் -
பாடு பொருள் " தாய்மை"

நாள் - புதன் கிழமை - 27.10.2004
காலம் - மாலை 6.00 மணி
இடம் - பாவலர் வ. விசயலட்சுமி வெங்கடாசலபதி இல்லம்
எண்: 72, புரட்சித்தலைவி நகர், தருமபுரி,
(புதிய நீர்த்தேக்கத் தொட்டி அருகில்)புதுச்சேரி-11

பாவலர் வ. விசயலட்சுமி வரவேற்புரையுடன்
பாவலர் ந.மு. தமிழ்மணி தொடக்கவுரையுடன்
பாவலர் ஆ. சிவலிங்கனார் சீரான் தலைமையில்
20ஆவது முழுநிலவுப் பாவரங்கம் "தாய்மை" என்னும்
பாடுபொருள் தலைப்புடன் 27.10.2004 புதனன்று இனிதே
நடந்தேறியது. கவிப்பூக்களைத் தொடுத்த கவிஞர்கள்:
இதோ


8. புதுவை விடுதலை 50 - மக்கள் திருவிழா
தொடக்க விழா

நாள் - ஞாயிறு - 31.10.2004
காலம் - மாலை 6.00 மணி
இடம் - தியாகி எஸ்.ஆர். சுப்பிரமணியம் அரங்கம்
(மீட்பரின் அன்னை இல்லம்)
துய்மா வீதி, புதுச்சேரி - 1

இராச. செயராமன் வரவேற்புரையுடன்
மேதகு தாவீது அன்னுசாமியர்கள் தொடக்கவுரையுடன்
திரு பிரபஞ்சன், எழுத்தாளர் தலைமையில்
துவங்கியது
நிகழ்ச்சி நிரல்:-

9. "பூவரசு" கலை இலக்கியப் பேரவை - ஜெர்மனி
"பூவரசு" 2005ஆம் ஆண்டு தைத் திங்கள் முதல் நாள்
15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதன்
பொருட்டு உலக எழுத்தாளர்கள் அனைவரும் பங்கு
கொள்ளும் வண்ணம் சிறுகதை/கட்டுரை/கவிதைப்
போட்டிகள் நடத்தவிருக்கிறது.
விதிமுறைகள்
சிறுகதை: விரும்பின கருவினைக் கொண்டு A4 அளவு
தாளில் 5 பக்கங்கள் கொண்டிருக்கலாம்.
கட்டுரை: "மனிதர்மனிதராக" எனும் தலைப்பில் A4
அளவு தாளில் 3 பக்கங்கள் கொண்டிருக்கலாம்.
கவிதை: "அங்கிங்கெனாதபடி" என்ற தலைப்பில் A4
அளவு தாளில் 2 பக்கங்கள் கொண்டிருக்கலாம்.
பொதுவிதிகள்
அனுப்பப்படும் படைப்புகள் வானொலி, இணையதளம்,
வார/மாத/நாளேடுகளில் வந்திருக்கக் கூடாது.
தழுவலாகவோ மொழிபெயர்ப்பாகவோ இருத்தற்
கூடாது. படைப்பாளர்கள் பெயர்/முகவரியுடன்
சொந்தப் படைபென்ற உறுதி மடலுடன் இணைத்து
அனுப்பவேண்டும். ஆக்கங்களை பூவரசுக் குழுவின்
நடுவர்கள் தேர்வு செய்வார்கள். பரிசுக்குரிவைக்கு
பரிசிலும், ஐரோப்பிய நாடுகள் தவிர்த்த பிறநாட்டுப்
படைப்புகள் தெரிவு செய்யப்படுகையில், பரிசில்
பணப்பரிசிலாக அளிக்கப்படும்
அனுப்பவேண்டிய முகவரி:
Poddikal 2005,
Poovarasu,
Postfach 10 34 01,
28 034 Bremen,
GERMANY.
மின்மடல் முகவரி:Poovarasu_Germany@hotmail.com
கடைசி நாள்: 15.12.2004.