பாரதி பிறந்தநாள் பாடல்

பாரதியின் பாட்டுத்திறம்


குருதியிட்ட தூவலினால் கொழுகொம் பின்றி
.....கொடிபோலத் துவன்றிட்ட மக்கள் தம்மைக்
குருதிகொட்டப் போராடும் தலைவ னொப்பக்
.....குன்றெனவே நின்றுபெரும் உண்மையான
ஒருமையுடன் வாழ்வதற்கு உணர்த்தும் பாட்டை
.....உலவவிட்ட காரணத்தால் உலகில் நாமும்
பெருமையுடன் வாழுகின்றோம் பிழை யில்லாப்
.....பாரதியின் வீரமிக்கப் பாட்டி னாலே!கலைமாமணி புலவர் நாகி,
புதுச்சேரி - 9