50ம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்


நேரிசை வெண்பா


பசிக்கின்ற மாணவர்க்குப் பாற்சோறு தந்து
புசியென்று கூறும் புதுவை - ஒசியாமல்
எல்லார்க்குங் கல்வி இனிதாகத் தாம்கொடுக்கும்
வல்லநல் லாட்சியினை வாழ்த்து!

விடுதலைக்கு வித்திட்ட வீரர்தம் வாழ்வில்
கெடுதலையே வரா திருக்க - நடுவுநிலை
குன்றாச் சிறப்புடனே கோதற்ற நம்மரசு
நன்றாய் நடத்திடுதே நன்கு!கலைமாமணி புலவர் நாகி,
புதுச்சேரி - 605009