பாரதி பிறந்தநாள் பாடல்

பாழ்நிலை நீக்க வாராய்


ஒன்றுபட்டால் வாழ்வுண்டாம் என்று ரைத்த
     வோங்குபுகழ் பாரதியே! ஊரார் அந்நாள்
ஒன்றுபட்டே வோரணியாய் நின்ற தாலே
     ஒண்டவந்த அயலவரு மோட்டம் பெற்றார்!
பெற்றுவிட்ட விடுதலையை வானு லாவப்
     பேசியிங்குப் பெருமைகொள்ளும் நம்மோர் நாட்டுப்
பற்றற்றுப் போயினரே! பாழாய்ப் போகும்
     பாரோரின் நிலைநீக்க வாராய் இங்கே!பாவலர் வே. முத்தையன்,
புதுச்சேரி