பாரதி பிறந்தநாள் பாடல்

பேரினிடை வாழ்கவி பாரதி


இன்பம் பெருக்கும் இனியபல பாவியற்றி
இன்னல் இருளகற்றி ஏந்திழையாள் சீருரைத்து
கன்னல் மொழியெனக் கற்றமிழை வாழவைத்தான்
தன்னந் தனியான கவி!

மிக்க புரட்சியதும் மேலான உண்மையதும்
தக்க கவியும் முறைபாடிப் - பக்குவமாய்
ஊர்நலமும் வாழ்முறையும் கூறுகின்ற பாரதியார்
பேரினிடை வாழ்கவிப் பார்!கவிஞர் ந. இராமமூர்த்தி,
புதுச்சேரி