50ம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்

நேரிசை வெண்பா


வங்கக் கடலலைகாள்! வந்து முழக்கிடுவீர்
எங்கள் தமிழ்ப்புதுவை ஏற்றமுற! - செங்கதிரே
சென்றெங்கும் சீர்த்தியொளி பாய்ச்சும் உயிரனைய
அன்னைத் தமிழை யறிந்து.

பொன்னொளிசேர் நற்புதுவை பொன்றாப் புகழ்வளர்க்கும்
நன்னயத்தார் வாழ்க நனிசிறந்து - எந்நாளும்
பல்வளங்கள் சூழ்ந்திடவே பைந்தமிழால் வாழ்கின்ற
நல்லோர்கள் வாழ்த்திடுவர் நன்று
தமிழ்மாமணி மன்னர்மன்னன்,
புதுச்சேரி