50ம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்

நேரிசை வெண்பா


கூல வணிகத் தளவூர், பிரான்சுக்குக்
கோலக் குடியிருப்பு நாடாம் - கூலிக்குப்
போலியாகப் போன புதுச்சேரி மக்களுக்குச்!
சோலையே கீழூராம் செப்பு.

தியாகிகள் கீழூரில் தீப்பிழம்பாய் நின்று
வியாதியாய் வெள்ளையர்க்(கு) ஆனார்கள் - நேயமுடன்
இன்றுநாம் கொண்டாடும் பொன்விழா தன்னையே
என்றும் மகிழ்ந்திடுவோ மேற்று.ஷெவாலியே ச. மதனகல்யாணி,
புதுச்சேரி