சூழ்ந்திடு வான்மழையே!

கட்டளைக் கலித்துறை


அஞ்சியும் கெஞ்சியும் நின்றிடும் பெண்ணினம் ஆண்டிடும்பார்
வஞ்சியர் சேர்ந்திட நற்பணி எங்கென வந்தனர்பார்
மிஞ்சிடும் பெண்ணுயிர் கொன்றிடும் புன்மையும் மீண்டிடும்பார்
நஞ்சினும் துட்டரை ஓட்டிடக் கற்றிடு நன்றிதுவே!

மெல்லியர் என்பதில் உள்ளது வஞ்சகம் மின்னிடப்பார்
தொல்லையைத் தந்திடும் இப்புகழ் தள்ளிடும் துன்புறத்தான்
பல்கலைக் கற்றுடன் மேன்மைகள் பெற்றிடும் பாங்கிதன்பேர்
சொல்லிட வள்ளுவன் வாய்ப்படி வான்மழை சூழ்ந்திடுதே!பாவலர் திருமதி மணிமேகலை குப்புசாமி
புதுச்சேரி