இலக்கியச் செய்திகள் - மார்ச்சு-2005 - புதுவையிலும், இணையத்திலும்  
   
இலக்கிய நிகழ்ச்சிகள்


கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்களுக்கு இலக்கணச்சுடர் முனைவர் இரா. திருமுருகனார் சிறப்பு செய்தல்

புதுச்சேரி - மின்னிதழ் அறிமுக விழா

இடம்: ஆறுமுகா திருமண நிலையம்
முத்தியால்பேட்டை, புதுச்சேரி
(இரேணுகா திரையரங்கு எதிரில்)
நாள்:
27.03.2005
நேரம்: மாலை நான்கு மணி
விழாக் குழுவினர்: இராச.தியாகராசன் & புலவர் செ. இராமலிங்கன்

கவிமாமணி இலந்தை இராமசாமி தலைமையேற்க, தமிழ்மாமணி மன்னர்மன்னன் விழாவினைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்ற, "தெளிதமிழ்" ஆசிரியர் - இலக்கணச்சுடர் முனைவர் இரா. திருமுருகனார், "நற்றமிழ்" ஆசிரியர் - புலவர் இறைவிழியனார், தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், கலைமாமணி கல்லாடனார், "வெல்லும் தூயதமிழ்" ஆசிரியர் - பாவலர் தமிழமல்லன், மற்றும் தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவ்வமயம் "இணையத்தமிழ் இலக்கியம்" எனும் பாடுபொருளில் பாவரங்கம் நடந்தேறியது


விழா நிகழ்ச்சியின் நிழற்படங்கள் இதோ


புதுவை கந்தசாமினின் "பசி" நூலை திருமிகு க. இலட்சுமி நாராயணன், ச.ம.உ வெளியிட, பாட்டாளி மக்கள்கட்சி மண்டல அமைப்பாளர் திரு இரா. அனந்தராமன் முதல்படி பெறுதல்

"பசி" - நூல் வெளியீட்டு விழா

இடம்: வேல் சொக்கநாதன் திருமண நிலையம், புதுச்சேரி
நாள்:
02.04.2005
நேரம்: மாலை ஆறு மணி
சமூக உணர்வாளர் திரு பெ. பராங்குசம் தலைமையில், முனைவர் அரங்க. முருகையன் முன்னிலையில், திருமிகு க.இலட்சுமி நாராயணன் ச.ம.உ, திருமிகு நீல. கங்காதரன் ச.ம.உ, திருமிகு இரா. சிவா ச.ம.உ ஆகியோர் கலந்து கொள்ள, புதுவை திரு கந்தசாமி அவர்களின் "பசி" என்ற நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நூலினை ஆய்வு செய்தவர்கள்: பேரா. முனைவர் திரு எ.மு. இராசன், காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி மற்றும் பேரா. முனைவர் திரு நா. இளங்கோ, தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி

பாடல் படைத்திடுக - வஞ்சிவிருத்தம்- 01
நற்றமிழ் இதழின் மரபுப்பா பயிற்சி

காட்டு
வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு
பண்டைநம் வினைகெட வென்றடிமேல்
தொண்டரும் அமரரும் பணியநின்றங்(கு)
அண்டமொ டகலிடம் அளந்தனனே!

(அ) ஒவ்வொரு அடியிலும் மும்மூன்று சீர்கள் இருத்தல் வேண்டும்
(ஆ) ஒவ்வொரு அடியின் சீரமைப்பு முறையே:
விளம் + விளம் + காய் என்றிருக்கவேண்டும்
(இ) இவ்வாறமைந்த நான்கடிகள் அடியெதுகை
பெற்றிருக்க வேண்டும்

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: மார்ச்சுத் திங்கள்,
31, 2005
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர், "நற்றமிழ்",
எண்: நாற்பத்து மூன்று, அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு
புதுச்சேரி -
605005.

-புலவர் அரங்க. நடராசன்

நூல் வெளியீட்டு விழா

இடம்: புதுவை கூட்டுறவு ஒன்றிய வளாகம், எண்: அறுபத்திரண்டு
சுப்ரெய்ன் வீதி, புதுச்சேரி
நாள்:
26.02.2005
நேரம்: மாலை 5.00 மணி
வெளியிட்டோர்: திருவாளர்கள்/திருமதி
பேரா. பஞ்சாங்கம்- ஒரு விமர்சகனின் பார்வையில்
தமிழச்சி - எஞ்சோட்டுப் பெண்
பேரா. கரு. அழ.குணசேகரன்
- தமிழ் மண்ணின் மரபுக் கலைகள்
டாக்டர் ப.உ. லெனின் - கலவி என்பதும் கல்வியே
முனைவர் நாக. செங்கமலத்தாயார்
புதுவை - ஈழம் இலக்கிய உறவுகள்
இந்திரன் - புதுச்சேரி - மனதைக் கீறும் சித்திரங்கள்


திருமிகு க.இலட்சுமி நாராயணன், ச.ம.உ. வெளியிட நூலின் முதல் படியை திரு துரை.மாலிறையன், சூரிய விசயகுமாரி இணையர் பெறுகின்றனர்

நூல் வெளியீட்டு விழா

இடம்: தூய மீட்பரின் அன்னை இல்லம், துய்மா வீதி, புதுச்சேரி
நாள்:
15.02.2005
நேரம்: மாலை ஆறு மணி.
புலவர் திருமதி பூங்கொடி பராங்குசத்தின் - வண்ண விளக்குகள்
பாவலர் திரு சிவ. இளங்கோவின்
- எட்டுமணிநேர வேலை ஆசியாவின் முதல் வெற்றி
பாவலர் திரு அ. உசேனின் - வெல்லும் வில்லுப்பாட்டு
ஆகிய நூலகள் வெளியீட்டு விழாவில்
முனைவர் திரு இரா. திருமுருகனாரில் தலைமையில்,
மாண்புமிகு க. இலட்சுமிநாராயணன் கல்வியமைச்சர் வெளியிட மற்றும்
சட்டமன்ற உறுப்பினர் திரு நீலகங்காதரன் சிறப்புரை யாற்ற
நூல்களை; பாவலர்கள்; துரை.மாலிறையன்: சூரிய விசயகுமாரி
இணையர்களும்,
திருவாளர்கள் ந.மு.தமிழ்மணி, ந.இரா. நரசிம்மமூர்த்தி
ஆகியோர் பெற்றனர்.
ஆய்வுரை வழங்கியோர்:
திருவாளர்கள்:
அ.அறிவு நம்பி, முதன்மையர் - "வண்ணவிளக்குகள்"
ஆ.வந்தியத்தேவன், வெளியீட்டு செயலாளர்
- "எட்டுமணிநேர வேலை ஆசியாவின் முதல் வெற்றி"
முனைவர் வி. அசோக்குமரன், பேராசிரியர் - வெல்லும் வில்லுப்பாட்டு.
புதுவையின் தமிழன்பர்கள் அனைவரும் வந்திருந்து விழாவினை
சிறப்பித்தனர். செவியுணவிற்குப் பின் வந்திருந்த அனைவர்க்கும்
வயிற்றுக்கும் நல்விருந்தளிக்கப்பட்டது
நூல் வெளியீட்டு விழா விவரங்கள்

அன்புசால் தமிழன்பர்களே! புதுச்சேரியின் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நெஞ்சில் உதிக்கும் சிந்தனை உளி கொண்டு செதுக்கிய நூற் சிலைகளைப் பற்றிய விவரங்களுக்காக தனியாக வலைப் பக்கமொன்றினை உருவாக்கி இருக்கிறோம். அந்நூல்களை தமிழன்பர்கள் வாங்கி படிப்பதற்கு ஏதுவாக படைப்பாளிகளின் முகவரிகள், தொலைபேசி/ செல்லிடப்பேசி எண்களும் தரப்படுகின்றன.
விவரமான வலைப்பக்கம் இதோ.


தமிழ் நாட்காட்டி வெளியீட்டு விழா

புதுச்சேரி 50ம் ஆண்டு பொன்விழாவினை ஒட்டி, புதுவை நண்பர்கள் தோட்டம், கவிதைப்பூங்கா தமிழன்பர்கள்
29.1.2005 காரி சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில் புதுச்சேரி, அரங்கப்பிள்ளை வீதியில் அமைந்த சூரியா பன்னாட்டு உணவகத்தில் தமிழ் நாட்காட்டி ஒன்றினை வெளியிடும் முகமாக விழாவொன்றிற்கு ஏற்பாடு செய்து வெளியிட்டனர்.
நாட்காட்டியின் விலை உருபா:
20/-
அணுக வேண்டிய முகவரி:
எண்:
46 தெற்கு வீதி, சீவானந்தபுரம், புதுச்சேரி - 605008
பாவரங்கம் பற்றி புதுவைத் தமிழ்ச் சங்க அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் பத்து தேதிக்குள் புதுவை
பாவலர்களிடமிருந்து பாடல்கள் பெறப்பட்டு
அவை ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமை
அன்று தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாவரங்கமாக
படிக்கப்படுமென்றும், சிறந்த பாடல்களுக்கு
பரிசுகளும் வழங்கப்படுமென்றும் புதுவைத் தமிழ்ச்
சங்கத்தலைவர் தமிழ்மாமணி மன்னர் மன்னன்
அவர்கள் அறிவித்தார்.
படைப்பினையனுப்ப வேண்டிய கடைசி நாள்:
ஒவ்வொரு மாதமும் முதல் பத்து தேதிக்குள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்ச் சங்க கட்டிடம்,
40 அடி சாலை, வெங்கட்ட நகர், புதுச்சேரி - 605011.
கவிதைப் பூங்கா - நண்பர்கள் தோட்டம்
முழுநிலவுப் பாவரங்க விவரங்கள் -
நண்பர்கள் தோட்டம்- கவிதைப் பூங்கா அமைப்பினர் ஒவ்வொரு மாதமும், முழுநிலவு நாள் முன்னிரவில் தமிழன்பர்கள் பங்கு பெறும் முழுநிலவுப் பாவரங்கம் ஒன்றினை நடத்துகின்றனர். மாறுபாடான பாடுபொருள் தலைப்புகள் தரப்பட்டு, பாவலர்கள் பாடல்கள் யாத்தளிக்கும் நிகழ்ச்சி மிகவும் அருமையானதொன்று. அத்துடன் ஒவ்வொரு மாதமும் ஏதேனுமொரு பாவலரின் நூல் வெளியீடு செய்யப்படுவதும் போற்றத் தக்கதாகும்.


நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திருமிகு க. இலட்சுமி நாராயணன் ச.ம.உ, பாவலர் ஈரோடு தமிழன்பன், புலவரேறு தமிழ்மாமணி, அரிமதி தென்னகனார்

வெள்ளிவிழா பாவரங்கமான இருபத்தைந்தாவது நிலவரங்கம் வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில், 25.3.2005 மாலை ஆறு மணியளவில் சாகித்திய அகாதமி விருது பெற்ற பாவலர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் இனிதே நடந்தேறியது. அவ்வமயம் புலவரேறு தமிழ்மாமணி அரிமதித் தென்னகனார் அவர்களின் 125ஆவது நூலான "வீர தீரக் கதைகள்" மற்றும் பாவலர் தி. அமிர்த கணேசனின் இரண்டு நூல்களான, "உள்வெளி", இரண்டாம் திங்களின் 24 நாட்கள்" ஆகியவையும் வெளியிடப்பட்டன.

முழுநிலவு பாவரங்க விவரங்கள் இதோ


திருமிகு க. இலட்சுமி நாராயணன் ச.ம.உ அவர்களிடமிருந்து, பாவலர் கலாவிசு "கவிமலர்" பட்டம் பெறுதல்

நூல் வெளியீட்டு விழா

புதுவை வேதபுரீசுவரர் ஆலைய வளாகத்திலுள்ள நூல் நிலையத்தில் புலவரேறு தமிழ்மாமணி அரிமதித் தென்னகனார் தலைமையில்
13.03.2005 ஞாயிறு மாலை ஆறு மணியளவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், பாவலர் திருமதி கலாவிசு அவர்களின் "உள்ளதைச் சொல்கிறேன்" என்ற நான்காவது நூலினை திருமிகு க. இலட்சுமி நாராயனன் ச.ம.உ வெளியிட்டார். அவ்வமயம் பாவலர் திருமதி கலாவிசு அவர்களுக்கு "கவிமலர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. திருமதி கலாவிசு அவர்களின் அன்புப் புதல்வி, செல்வி வி. அம்ரிதா நடனத்துடன் தொடங்கிய விழாவில், தமிழறிஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கலைமாமணி கல்லாடனுக்கு புலவர் துரை.மாலிறையன் சிறப்பு செய்தல்

நூல்கள் வெளியீட்டு விழா

தூய மீட்பரின் அன்னை இல்லத்தில்
19.03.2005 அன்று சனிக்கிழமை மாலை ஆறு மணியளவில் மக்கள் கலைக் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நூல்கள் வெளியீட்டு விழா முனைவர் திரு மு. கலைவேந்தன் தலைமையில் இனிதே நடந்தேறியது. அவ்வமயம் கலைமாமணி கல்லாடனின் "இலக்கிய வண்ணங்கள்" என்ற நூலும், திருமதி கு. அன்புக்கரசியின் "கல்லாடனின் கவிதைகளில் இயற்கை" எனும் ஆய்வு நூலும் திருமிகு க. இலட்சுமிநாராயணன் ச.ம.உ அவர்களால் வெளியிடப்பட்டன. நூல்களை ஆய்வு செய்து அறிமுகம் செய்தவர்: பேரா. முனைவர் சிவ. மாதவன் மற்றும் திரு நந்திவர்மன்.

மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா

புதுச்சேரி - மின்னிதழின் சார்பாக மகாகவிக்கு
வீர வணக்கமாக
11.12.2004
அன்று புதுச்சேரி மற்றும் இணையத்தின் பாவலர்கள் யாத்தளித்த
மரபுப் பாக்களை பெற்று வலையேற்றம் செய்தோம்
பாடல்களூக்கான இணைப்புத்தொடர்:
மாகவி பற்றிய பிறந்த நாள் பாடல்கள்

பொறுப்பாசிரியர், புதுச்சேரி - மின்னிதழ்

கவியரங்கத் துவக்க விழா - நாள்18.10.2004.
"கவிதை வானில்" என்னும் கவியரங்க விழா
நாற்பது அடி வெங்கட்ட நகர் சாலையிலமைந்த
தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில்
அறிவுசால் திரு மன்னர்மன்னன் தலைமையேற்க,
புரவலர் திரு வேல்சொக்கநாதன் அனுப்பி வைத்த
வாழ்த்துரையுடன் திருமதி கலாவிசு அவர்களின்
நோக்கவுரையுடன் கலைமாமணி நாகி,
தமிழ்மாமணி சீனு இராமச்சந்திரன்
திருமதி வாசுகி இராஜாராம்,
திருமதி இரேணுகாம்மாள்
திரு இராமகிருட்டின பாரதி இவர்களின் வாழ்த்துரையுடன்
புலவரேறு திரு அரிமதி தென்னகனார்
கவியரங்கு தலைமை தாங்க
இன்னும் பல பல்சுவைக் கவிஞர்களின் தமிழ்த் தேரோட
இனிதே நடந்தேறியது. கவிதை வானிற் சிறகடித்தனர்
புதுவைத் தமிழ்மக்கள்! ஒவ்வொரு மாதமும் இரண்டாம்
சனிக்கிழமை கவிதாயினி திருமதி கலாவிசு அவர்களின்
இல்லத்தில் "கவிதை வானில்" கவியரங்கம்
நடைபெறுமென்று அறிவிக்கப் பட்டது

மேலும் விவரங்களுக்கு முகவரி:
எண்: ஆறு, வேலாயுதம் பிள்ளைத் தெரு
(இரேணுகா திரையரங்கருகில்)
முத்தியால் பேட்டை, புதுச்சேரி
தொலைபேசி:

செல்லிடப்பேசி:

கவிதை வானில் கவியரங்க விவரங்கள்
புதுவை விடுதலை பொன்விழா ஆண்டு
50 கவிஞர்கள் பங்கேற்கும் வெண்பாக் கவியரங்கம்

புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை, விடுதலை
பொன்விழாவையொட்டி புதுவை காந்தி திடலில்
கலை நிகழ்ச்சிகளை நடத்தியது - இதில்

19.10.2004 செவ்வாய் மாலை 6.30 மணியளவில்
புதுவைத் தமிழ்ச் சங்கம்
50 கவிஞர்கள் பங்கேற்கும்
சிறப்புமிக்க "வெண்பாக் கவியரங்கம்" என்ற புதுவை
நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது!
தமிழ் நன்மக்கள் அனைவரும் வந்தனர்!
தமிழ் நற்சுவையனைத்தும் பெற்றனர்! வெண்பாக்களை
யாத்தளித்த
50 கவிஞர்கள் பெயர்கள்:
இதோ

மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா

11.12.204அன்று புதுவை அரசின் கலை, பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்துடன் இணைந்து பாரதியார் பிறந்த நாளை பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் நடத்தியது
அவ்விழாவில்:
புதுவையின் மாண்புமிகு கல்வியமைச்சர்,
க. இலட்சுமி நாராயணன் தலைமையேற்று சிறப்புரையாற்ற
வளர்ச்சி ஆணையர், கலை/பண்பாட்டுத்துறை செயலர்
திரு பா.வே. செல்வராஜ் வாழ்த்துரை வழங்க
விழா இனிதே நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து
முனைவர் அறிவுடை நம்பி தலைமையில் *பாரதியின்
கட்டளைகள்* என்ற தலைப்பில் கவியரங்கமும்
முனைவர் திரு அ. அறிவொளி தலைமையில்
*பாரதியின் சிந்தனையில்* என்ற தலைப்பில்
கருத்தரங்கமும் நடைபெற்றன.
மலேஷிய புதுவை எழுத்தாளர்கள் சந்திப்பு

மலேஷிய எழுத்தாளர்கள் இலக்கிய சுற்றுலா வகையாக
13.12.2004 திங்கட்கிழமை அன்று புதுச்சேரிக்கு வருகை தந்தனர். இலக்கிய நிகழ்வாக புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகத்தின் கருத்தரங்கக் கூடத்தில் காலை பத்தரை மணிமுதல் மதியம் இரண்டரை மணிவரையில் புதுவைப் படைப்பாளிகளுடன் கலந்துரையாடலும் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வமயம்:
வரவேற்புரை: திரு செ. ஆதவன். ஒருங்கிணைப்பாளரும்
அறிமுகவுரை: திரு பெ. இராசேந்திரன், அவர்களும்
(தலைவர், மலேஷியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்)
நோக்கவுரை: முனைவர் திரு இ.ஜே. சுந்தர், அவர்களும்
(இந்தியச் சார்பாளர், மலேசிய நண்பன் நாளிதழ்)
முன்னிலை: நீதியரசர் தாவீது அன்னுசாமி அவர்களும்
சிறப்புரை: மாண்புமிகு ந. அரங்கசாமி, அவர்களும்
(புதுவை முதலமைச்சர்)
வாழ்த்துரை:
மாண்புமிகு க. இலட்சுமி நாராயணன், அவர்களும்
(புதுவைக் கல்வியமைச்சர்)
விரிவுரை: பொன்முடி - அவர்கள்
"மலேசிய தமிழர் வாழ்வும் எழுத்தும்" என்ற தலைப்பிலும்
நன்றியுரை: முனைவர் திரு சுந்தர முருகன் அவர்களும்
(துணை ஒருங்கிணைப்பாளர்)
வழங்க விழா இனிதே நடந்தேறியது.