வலைதளம் வாயிலாக வண்டமிழ் வளர்ப்போம்!

நிலைமண்டில ஆசிரியப்பா


வலைதளம் வாயிலாய் வண்டமிழ் வளர்க்க
நிலைத்தமிழ் நினைப்புடன் நீள்பணி யாற்ற
உலைக்கள உணர்வுடன் உயர்ந்த மனத்துடன்
சிலைவைப் பதுபோல் சீரிய படைப்புகள்
விலையில் லாமல் வலையேற்றி யயெம்
வரசன் இந்நிலம் புகழச்
சாகும் என்பவர் சழக்கினை யறிந்தே
வாழும் வகையை வாகாய்ச் செய்தார்!
ஆழமாய் யன்பால் அவரை வாழ்த்துவேன்
ஒன்பாய் முயல்க தேடிடும் ஆக்கம்
இன்புற் றென்றும் எழிலுற வாழ்க!
புதுச்சே ரிமின்னிதழ் பொலிக உலகெலாம்!
எதுசரி யென்பதை இதுவே சொல்க!
உலகத் தமிழர் ஒன்றிணைந் துயர,
புலம்பெயர் மக்கள் பொலிவினை மீட்டிட,
புதுச்சே ரிமின்னிதழ் புதுத்தென் பளிக்க
எதிர்பார்ப் பில்லா வரசன்
இன்றும் நாளையும் என்றும் வாழ்க!
ஒன்றிய உளத்துடன் உரைக்கிறேன் வாழ்த்தே!பாவலர் க. தமிழமல்லன்,
புதுச்சேரி