பாவேந்தர் நினைவாக

புகை ஒழித்தால் செழிக்கும் வையம்


வேண்டு முயிர்வா ழவேண்டு மெனில்
வேண்டு வகையறிந் துவாழ வெனில்
வேண்டுமிப் பழக்க மொழிக்க வேண்டியே
வேண்டு மிதனைப் பழக்க வேண்டும்

மாசறு காற்று மாநிலம் நிறைந்திட
மாசறு காற்று மழலையும் அடைந்திட
மாசளித் திடும்புகைப் பழக்கம் போக்கிட
மாசிலா நம்முடல் என்றுமே நிலைத்திட

வாகனப் புகையனை செயற்கை புகையுடன்
வாகாய்ப் பிடிக்கும் வெண்குழற் புகையினை
ஒழித்து ஒழித்து ஒழித்து ஒழிக்கையில்
தழைத்துத் தழைத்துச் செழிக்கும் வையமே! .பாவலர் மதுமிதா
சென்னை