பாரதி பிறந்தநாள் பாடல்

பாரதியை வாழ்த்துவோம்


பாரதியின் பாட்டெல்லாம் சமுதா யத்தைப்
     பண்படுத்தும் பாட்டாகும்! தமிழுங் கொஞ்சும்!
சீரதிகம் கொண்டதவன் பாக்க ளெல்லாம்
     சீர்திருத்தம், விழிப்புணர்வை எடுத்துக் காட்டும்!
வேரதிர வெள்ளையரின் ஆதிக் கத்தை
     வெடிவைத்துத் தகர்த்தவன் வேட்டுப் பாட்டே!
கூரதிகம் கொண்டவன் பாட்டின் சொற்கள்!
     கொண்டாடி பாரதியை வாழ்த்து வோமே!புலவர் செ. இராமலிங்கன்
புதுச்சேரி