50ஆம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்

நேரிசை வெண்பா


வெற்றிபெற்ற எம்புதுவை வெங்கொடுமை யில்லாத
பெற்றவெற்றிப் பேணிடும் பேற்றினில் - வற்றாச்
சமத்துவத்தை என்றென்றும் சார்ந்தே ஒலித்திடு(ம்)
எம்புதுவை நல்லூர் இயம்பு.

எல்லாமும் எல்லாரும் ஏற்றளவே பெற்றாலும்
அல்ல லிலாவாழ் வமைந்தாலும் சொல்லவல்ல
தன்னே ரிலாத்தமிழ் தானாள வில்லையெனுந்
தண்புதுவை வெல்லுமோ சாற்று.

புலவர் செ. இராமலிங்கன்,
புதுச்சேரி - 605004