50ம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்

நேரிசை வெண்பா


பொன்னார் மரபுகளும் போற்றுபல மாண்புகளும்
இன்னே இலங்கு மெழில்நகராம் - மின்னேகேள்!
பொங்கும் விடுதலைப் பொன்விழாக் காணுகின்ற
எங்கள் புதுவை யிது.

வங்கக் கடலலையும் வண்டமிழின் நல்லிசையும்
இங்குக் கலந்தே இனித்திருக்கும் - பொங்குமெழில்
பூத்தத் திருநகராம் பொன்விழாக் கண்டுபுக
ழேத்தும் புதுவை யிது.கலைமாமணி திரு கல்லாடன்,
புதுச்சேரி - 605013