பாரதி பிறந்தநாள் பாடல்

பாரதியே வணங்குகின்றேன்


ஒற்றுமைக்குப் பாடுபட்டாய்! ஒப்பி லாத
     உயர்கவிகள் பாடிவிட்டாய்! உரிமை யோடு
பற்றுவைத்தாய் பாரதத்தாய் நாட்டின் மீது!
     பாழ்மூடப் பழக்கத்தை வெறுக்கச் செய்தாய்!
கற்றவரும் மற்றவரும் காதல் கொள்ளும்
     கருத்தோடு விடுதலையை வேண்டி நின்றாய்!
பெற்றதிரு நாட்டினது பெருமை காத்த
     பெரும்புலவன் பாரதியே! வணங்கு கின்றேன்!கவிஞர் தே. சனார்த்தனன்,
புதுச்சேரி