பாரதி பிறந்தநாள் பாடல்

செயல் வடிவம் ஆக்கல் வேண்டும்


பாரதிக்கு விழாவெங்கும் எடுக்கக் கண்டோம்
..........பாரதியின் பாடலெங்கும் பாடக் கேட்டோம்
தீரவில்லை சாதிமதப் பூச லிங்கே!
..........தீந்தமிழில் பெயரில்லை ஒப்ப மில்லை
ஊரெல்லாம் பெண்ணடிமை பேசல் கேளீர்
..........உரிமையுடன் உழைப்பாளர் வாழ்கின் றாரா?
பாரதியின் புகழ்பரவ அவரின் கொள்கை
..........பாருணரச் செயல் வடிவ மாக்கல் வேண்டும்!புலவர் மு. இறைவிழியனார்
ஆசிரியர் *நற்றமிழ்* - புதுச்சேரி