எண்சீர் வண்ண விருத்தம்

வெற்றுச் சொற்கே எழுபகை விழுமோ?


இருசெவியுற ஒருதமிழினை வைத்துப் பித்தா
     வெனவுருகிட எமையழையென நெற்றிப் பொட்டொ
டொருவிழியுடை உமைசிவனிறை முத்துச் சொற்கே
     உளமகிழுற ஒருமடபதி முற்பட் டுத்தீ
தருமொழியிது வெனமொழிவதை ஒட்டத் தட்டா
     தடிமரமென மொழியழிவினை விட்டுப் பற்றாய்
இருவிழியெம தருமொழியெனும் வெற்றுச் சொற்கே
     எழுபகைவிழு மெனவிழைவது முற்றத் தப்பே!பைந்தமிழ்ப் பாவலர் இரா. இளமுருகன்
புதுச்சேரி