புதுச்சேரி மின்னிதழ் - பாவரங்கப் பாடல்

இணையத்தமிழ் இலக்கியம்


மறைபுலவோர் போற்றுகின்ற மாத்தமிழாள்; மணிமொழியார்;
விரைவுற்றே இணையத்தில் நன்றே வீற்றிருக் கின்றாள்;
அறைக்குள்ளும் சிறைக்குள்ளும் அவளீருந்தாள் - இந்நாளோ
ஆளுகின்றாள் அவனியெலாம் அன்பாலே நம்நெஞ்சை

திரையிட்டே யவள்புகழை மறைக்கின்ற வண்ணத்தில்
இணையத்தி லாங்கிலமே தோன்றுகின்ற திந்நாளும்,
உறையுளுக்குந் தமிழ்பிறரை ஏன்நாட வேண்டு - மிந்தக்
குறைநீங்க வழிவிரைந்தே தேடிவிட வேண்டுமன்றோ!

பொறிதட்டும் போதெல்லாம் கவிகட்டும் புள்ளிகளே! - கணினிப்
பொறிதட்டிப் பழகிவந்தால் நீங்கிவிடும் கள்ளிகளே!
திரையினிலே தோன்றுகின்ற வெறுஞ்சின்னப் புள்ளிகளே! - பின்
குறைவதற்கு நாளாகும் வளர்கின்ற தொல்லைகளே!

நிறையட்டும் தமிழ்மொழியிற் பற்பலவாய் மின்னிதழ்க்ள்;
மலரட்டும் உலகமெலாம் செந்தமிழில் இணையங்கள்;
பெருகட்டும் புதிதான சிறந்தகருத் தாக்கங்கள்;
வளருட்டும் இணையத்தார் பெறும்நல்ல ஊக்கங்கள்!புதுவை கோ. பாரதி,
புதுச்சேரி