50ம் ஆண்டு பொன்விழா - வெண்பாவரங்கம்

நேரிசை வெண்பா


செல்வஞ் செழிக்குமூர் சீர்கடல் சாருமூர்
வல்லக் கவிஞர் வளர்க்குமூர் - பல்வகை
ஆலைத் திகழுமூர் அன்பயலார் சேருமூர்
சாலையெழி லெம்புதுவை தான்.

முறுக்கிய மீசையும் முப்பகுதிப் பாட்டும்
நறுக்கிய மீசையும் நாளும் - குறுக்கமின்றி
எங்குந் தொழில்வளமும் ஏருழவும் நீர்வளமும்
எங்கள் புதுவைக்(கு) எழில்.புதுவை கோ. பாரதி,
புதுச்சேரி - 605009