மகளிரின் பங்கு!


புதுக்கவிதை

முன்னேற்றமதை இயலாதவர்க்கு கற்றுக் கொடுப்போம்;
முழுவதுமே செய்து முடிப்போம்!
முன்னோர் சொன்ன நேர்வழியில் நடப்போம்;
முக்கிய பங்கினை உலகில் பதிப்போம்!
முழுநிலாப் போன்று பொலிந்து நிற்போம்;
முற்காலமதை நினைவிற் கொள்வோம்!
முடியாத தொன்று மில்லை யென்று
மகிழ்ந்தே சொல்வோம்!
மூன்றி லொரு பங்கினை கேட்டோம் - இன்று
முன்சொல்வோம்! முயன்றே நடப்போம்!
முடிவில் முன்னேற் றமதை பிறர்க்கும்
கற்றே கொடுப்போம்; அதில் வெற்றியும் பெறுவோம்!பாவலர் செ. எவிலியன் மரி
புதுச்சேரி