பாரதியை வாழ்த்துவமே!


புதுக்கவிதை

இனிதினிது பாடல் இயற்றுவதினிது - அதனினும்
பாரதியார் பற்றியே பாடுவதினிது!
பண்ணிசைத்து பாடி வைத்தார் பாரதியார்;
பக்குவத்துடன் பாப்புனைந்தேன் கேட்பீரா?
புதுவையில் புதுமையாய் மரபுப்பா வியற்றிய
புன்னகை பூத்த பாரதிக் கெங்கள்
புதுமரபின் வழியினிலே வாழ்த்துகி றோமே!
பாவலர் செ. எவிலியன் மரி
புதுச்சேரி