பாரதி பிறந்தநாள் பாடல்

நந்தமிழுக்குத் தூண் பாரதி


பாட் டெடுத்துப் பாடிநம் பாஞ்சாலி சீர்மிகுத்தார்
கூட் டமிழ்தப் பாட்டால் குயில்புகழைக் - காட்டுகின்ற
வண்ணம் தமிழ்பாடி வாழ்கின்றார் பாரதியார்
கண்ணன்பாட் டாலுங் கனிந்து.

வோசை நயங்கொஞ்சும் உணர்வுடையப் பாப்புனைந்தே
ஆசையினால் சான்றோர் அனைவரையும் - பேசவைத்தார்
வாய்மை வழிநின்ற வண்புலவர் பாரதியின்
தூய்மைநலம் நந்தமிழுக்குத் தூண்.புலவர் துரை. மாலிறையன்
புதுச்சேரி