இலக்கியச் செய்திகள் - டிசம்பர்-2004 மற்றும் சனவரி-2005
புதுவையிலும், இணையத்திலும்
 
   
இலக்கிய நிகழ்ச்சிகள்
கவியரங்கத் துவக்க விழா - நாள்18.10.2004.
"கவிதை வானில்" என்னும் கவியரங்க விழா
நாற்பது அடி வெங்கட்ட நகர் சாலையிலமைந்த
தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில்
அறிவுசால் திரு மன்னர்மன்னன் தலைமையேற்க,
புரவலர் திரு வேல்சொக்கநாதன் அனுப்பி வைத்த
வாழ்த்துரையுடன் திருமதி கலாவிசு அவர்களின்
நோக்கவுரையுடன் கலைமாமணி நாகி,
தமிழ்மாமணி சீனு இராமச்சந்திரன்
திருமதி வாசுகி இராஜாராம்,
திருமதி இரேணுகாம்மாள்
திரு இராமகிருட்டின பாரதி இவர்களின் வாழ்த்துரையுடன்
புலவரேறு திரு அரிமதி தென்னகனார்
கவியரங்கு தலைமை தாங்க
இன்னும் பல பல்சுவைக் கவிஞர்களின் தமிழ்த் தேரோட
இனிதே நடந்தேறியது. கவிதை வானிற் சிறகடித்தனர்
புதுவைத் தமிழ்மக்கள்! ஒவ்வொரு மாதமும் இரண்டாம்
சனிக்கிழமை கவிதாயினி திருமதி கலாவிசு அவர்களின்
இல்லத்தில் "கவிதை வானில்" கவியரங்கம்
நடைபெறுமென்று அறிவிக்கப் பட்டது
மேலும் விவரங்களுக்கு முகவரி:
எண்: ஆறு, வேலாயுதம் பிள்ளைத் தெரு
(இரேணுகா திரையரங்கருகில்)
முத்தியால் பேட்டை, புதுச்சேரி
தொலைபேசி:

செல்லிடப்பேசி:

கவிதை வானில் கவியரங்க விவரங்கள்
பாவரங்கம் பற்றி புதுவைத் தமிழ்ச் சங்க அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் பத்து தேதிக்குள் புதுவை
பாவலர்களிடமிருந்து பாடல்கள் பெறப்பட்டு
அவை ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமை
அன்று தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாவரங்கமாக
படிக்கப்படுமென்றும், சிறந்த பாடல்களுக்கு
பரிசுகளும் வழங்கப்படுமென்றும் புதுவைத் தமிழ்ச்
சங்கத்தலைவர் தமிழ்மாமணி மன்னர் மன்னன்
அவர்கள் அறிவித்தார்.
படைப்பினையனுப்ப வேண்டிய கடைசி நாள்:
ஒவ்வொரு மாதமும் முதல் பத்து தேதிக்குள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்ச் சங்க கட்டிடம்,
40 அடி சாலை, வெங்கட்ட நகர், புதுச்சேரி - 605011.
பாடல் படைத்திடுக - வஞ்சித்துறை- 19
நற்றமிழ் இதழின் மரபுப்பா பயிற்சி

காட்டு
பொருளெல்லாம் கடலினில்
உருண்டோட இழந்தவர்க்
கருள்கொண்ட மனத்துடன்
பொருளொன்றை உதவுவோம்!

(அ) ஒவ்வொரு அடியிலும் இரண்டு சீர்கள் இருத்தல் வேண்டும்
(ஆ) ஒவ்வொரு அடியின் சீரமைப்பு முறையே:
புளிமாங்காய் + கருவிளம் என்றிருக்கவேண்டும்
(இ) இவ்வாறமைந்த நான்கடிகள் அடியெதுகை
பெற்றிருக்க வேண்டும்

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: சனவரித் திங்கள், முப்பத்தொன்று,
2004
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர், "நற்றமிழ்",
எண்: நாற்பத்து மூன்று, அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு
புதுச்சேரி -
605005.

-புலவர் அரங்க. நடராசன்

புதுவை விடுதலை பொன்விழா ஆண்டு
50 கவிஞர்கள் பங்கேற்கும் வெண்பாக் கவியரங்கம்

புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை, விடுதலை
பொன்விழாவையொட்டி புதுவை காந்தி திடலில்
கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது - இதில்

19.10.2004 செவ்வாய் மாலை 6.30 மணியளவில்
புதுவைத் தமிழ்ச் சங்கம்
50 கவிஞர்கள் பங்கேற்கும்
சிறப்புமிக்க "வெண்பாக் கவியரங்கம்" என்ற புதுவை
நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது!
தமிழ் நன்மக்கள் அனைவரும் வந்தனர்!
தமிழ் நற்சுவையனைத்தும் பெற்றனர்! வெண்பாக்களை
யாத்தளித்த
50 கவிஞர்கள் பெயர்கள்:
இதோ

கவிதைப் பூங்கா - நண்பர்கள் தோட்டம்
இருபத்திரண்டாவது முழுநிலவுப் பாவரங்கம் -
பாடு பொருள் "வேள்வி"

நாள் - ஞாயிற்றுக் கிழமை -
26.12.2004
காலம் - மாலை ஆறு மணி
இடம் - புலவர் துரை. மாலிறையன் இல்லம்
எண்: பதினெட்டு, முதன்மைத் தெரு, மங்கலட்சுமி நகர்,
(புது பேருந்து நிலையம் பின்புறம்), புதுச்சேரி -
605013.

இருபத்திரண்டாவது முழுநிலவுப் பாவரங்கம் "வேள்வி" என்னும் பாடுபொருள் தலைப்புடன் 26.12.2004, ஞாயிறன்று நடந்தேறியது. ஆயினும் ஆழிப் பேரலையின் சீற்றத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததாய் முதல்
செய்தி கிடைத்ததால் வந்திருந்த கவிஞர்கள் அத்தனை பேரும் இரங்கல் வேள்வி நடத்தி தமது நெஞ்சகத்து உணர்வுகளை கண்ணீர்க்கவி மாலையாக தொடுத்தனர். முழுநிலவு பாவரங்க விவரங்கள் இதோ

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அன்புசால் தமிழன்பர்களே! "புதுவை பிரபா" என்றழைக்கப்படும் திரு உ.பிரபாகரன், வேளாண் அலுவலர், அவர்களின் "விதைகள்" என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா 10.01.2005 திங்கட்கிழமை அன்று, புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு, பார்வதி திருமண நிலையத்தில், மாலை 5.30 மணியளவில் தமிழ்ச் சான்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் அன்புடன் கலந்துகொண்டனர்.

மணிவிழா நிறைவு வாழ்த்துப் பாவரங்கம்

திரு இராம.சோமசுந்தரனார் திருமதி சந்திரா தம்பதியினரின் அறுபதாம் ஆண்டு நிறைவுவிழா தி.பி.
2035 மார்கழித் திங்கள் பதினொன்றாம் நாள் (26.12.2004), காலை ஆறு மணியளவில் கதிர்காமம் அருள்மிகு முருகன் திருக்கோயிலில் நடைபெற்றது. அவ்வமயம் 56 புலவர்கள் பாமாலையால் வாழ்த்து தெரிவித்தனர்
தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க பதினேழாவது மாநாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள தமிழ்ச் சிற்றிதழ்கள்
சங்கத்தின் பதினேழாவது மாநாடு. 30.1.2005
ஞாயிறன்று கோவை மாவட்டம் திருப்பூரை அடுத்துள்ள
பல்லடத்தில் நடைபெறவுள்ளது
மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா

11.12.204அன்று புதுவை அரசின்
கலை, பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு
மையத்துடன் இணைந்து பாரதியார் பிறந்த நாளை
பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் நடத்தியது
அவ்விழா:
புதுவையின் மாண்புமிகு கல்வியமைச்சர்,
க. இலட்சுமி நாராயணன் தலைமையேற்று சிறப்புரையாற்ற
வளர்ச்சி ஆணையர், கலை/பண்பாட்டுத்துறை செயலர்
திரு பா.வே. செல்வராஜ் வாழ்த்துரை வழங்க
விழா இனிதே நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து
முனைவர் அறிவுடை நம்பி தலைமையில் *பாரதியின்
கட்டளைகள்* என்ற தலைப்பில் கவியரங்கமும்
முனைவர் திரு அ. அறிவொளி தலைமையில்
*பாரதியின் சிந்தனையில்* என்ற தலைப்பில்
கருத்தரங்கமும் நடைபெற்றன.
மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா

புதுச்சேரி - மின்னிதழின் சார்பாக மகாகவிக்கு
வீர வணக்கமாக
11.12.2004
அன்று புதுச்சேரி மற்றும் இணையத்தின் பாவலர்கள் யாத்தளித்த
மரபுப் பாக்களை பெற்று வலையேற்றம் செய்தோம்
பாடல்களூக்கான இணைப்புத்தொடர்:
மாகவி பற்றிய பிறந்த நாள் பாடல்கள்

பொறுப்பாசிரியர், புதுச்சேரி - மின்னிதழ்

மலேஷிய புதுவை எழுத்தாளர்கள் சந்திப்பு

மலேஷிய எழுத்தாளர்கள் இலக்கிய சுற்றுலா வகையாக
13.12.2004 திங்கட்கிழமை அன்று புதுச்சேரிக்கு வருகை தந்தனர். இலக்கிய நிகழ்வாக புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகத்தின் கருத்தரங்கக் கூடத்தில் காலை பத்தரை மணிமுதல் மதியம் இரண்டரை மணிவரையில் புதுவைப் படைப்பாளிகளுடன் கலந்துரையாடலும் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வமயம்:
வரவேற்புரை: திரு செ. ஆதவன். ஒருங்கிணைப்பாளரும்
அறிமுகவுரை: திரு பெ. இராசேந்திரன், அவர்களும்
(தலைவர், மலேஷியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்)
நோக்கவுரை: முனைவர் திரு இ.ஜே. சுந்தர், அவர்களும்
(இந்தியச் சார்பாளர், மலேசிய நண்பன் நாளிதழ்)
முன்னிலை: நீதியரசர் தாவீது அன்னுசாமி அவர்களும்
சிறப்புரை: மாண்புமிகு ந. அரங்கசாமி, அவர்களும்
(புதுவை முதலமைச்சர்)
வாழ்த்துரை:
மாண்புமிகு க. இலட்சுமி நாராயணன், அவர்களும்
(புதுவைக் கல்வியமைச்சர்)
விரிவுரை: பொன்முடி - அவர்கள்
"மலேசிய தமிழர் வாழ்வும் எழுத்தும்" என்ற தலைப்பிலும்
நன்றியுரை: முனைவர் திரு சுந்தர முருகன் அவர்களும்
(துணை ஒருங்கிணைப்பாளர்)
வழங்க விழா இனிதே நடந்தேறியது.