பாரதி பிறந்தநாள் பாடல்

பாரதியைப் போற்றுகின்றேன்


சாதிமதிச் சழக்குகளைச் சாடி, நல்ல
     சமதர்மப் பாதைதனைத் தேடி, வல்ல
நீதிநெறி யோங்கிடவே யோடி, இந்த
     நீள்புவியில் தமிழெடுத்துப் பாடி, மண்ணில்
மோதிவரும் அறியாமை மாய, ஏட்டில்
     முற்போக்குத் தத்துவத்தை யூட்டி, இங்குக்
கோதில்சீர் பெண்ணினத்தின் பெருமை காக்கக்
     குரல்கொடுத்த பாரதியே! போற்று கின்றேன்பாவலர் கி. பாரதிதாசன்,
பிரான்சு.