பாரதி பிறந்தநாள் பாடல்

முண்டாசுக்காரன் உண்டாக்கிய குணம்


முண்டாசுக் காரன் முறுக்கு மிளமீசை
கண்டாலே கூசுமக் கண்ணன் இவந்தானே!
உண்டாக்கி விட்டான் உணர்வை அதனாலே
கொண்டேன் செருக்கு குணம்

தலைமேல் விடாது தவழ்கின்ற மேகத்தை
காலை எழுந்த கதிரவனை மாலையில்
காண்கின்ற வெண்ணிலவைக் காணாத காற்றையும்
நாணுவகைச் செய்வேனே நான்.கவிஞர் முனைவர் உரு. அசோகன்
புதுச்சேரி