பாரதி பிறந்தநாள் பாடல்

பாரதி என்றொரு புலவன்


பாரதியென் றொருபுலவன் பாரதிரப் பாட்டெ ழுதி
     பார்ப்பவனைப் படிக்கவைத்தான் படித்தவனைப் புரிய வைத்தான்.
வீரத்தை எழுத்தாக்கி வீட்டுக்குள் அனுப்பி வைத்தான்
     விடுதலையை நாட்டுக்குள் விளையாட வைத்து விட்டான்
வோரத்தில் நடந்தவனும் உரிமைக்குக் குரல்கொ டுத்தான்
     ஒற்றுமைதான் வாழ்க்கைக்கு உரியவழி யெனச் சொல்லி
கூறவந்த எண்ணத்தைக் குழந்தைக்குக் கொடுத்து விட்டு
     மனிதநேயம் நம்மெதிரில் மலரும்பார் எனச் சொன்னான்.பாவலர் அண்ணா. தருமலிங்கம்
புதுச்சேரி