மதுவை நிகர்ப் புதுவைக் கவிகள்!

கலி விருத்தம்


மதுவைநிகர்க் கவிபுகலும் வளமைமிகு கவிஞர்நிறை
புதுவையினில் வெளியிடுமிப் புதுமைகொழி இதழழகுப்
பதுமமெனத் தமிழுலகில் பலர்புகழ மலரஇறை
பதமதனைத் தொழுதுமது பணிவளர வழுத்துகிறேன்.பேராசிரியர் பாவலர் அனந்த நாராயணன்,
கனடா